Friday, January 02, 2009

வீழ்ந்தது கிளிநொச்சியாயினும், எழுவது தமிழனாய் இருக்கட்டும்

கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது! தமிழ் தேசத்தின் தலைநகரம் துரோகிகளின் துணையோடு சிங்களவனிடம் வீழ்ந்துவிட்டது. ஆம் இது தமிழனுக்கான தோல்விதான், பின்னடைவுதான், அதனால் என்ன? இன்றும், என்றும் வீழாது குறையாது இருப்பது தமிழனின் நெஞ்சுரமும் அவனது விடாது போராடும் குணமும்தான் அப்படியே இருக்கிறதே.

சோர்ந்து போகாதீர்கள் சொந்தங்களே, தமிழ் தேசத்தை விடுவிப்பதற்கான பொருப்பை ஈழத்தில் வாழும் சொந்தங்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மட்டும்தான் என இருந்துவிட வேண்டாம். தற்பொழுது நடக்கின்ற யுத்தம் இறுதியுத்தம் என யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஈழத்தில் நடக்கின்ற யுத்தம் மட்டுமே தமிழீழத்தை பெற்றுத் தந்துவிடாது. தமிழீழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட தேசத்திற்கான யுத்தம் என்பது உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் நடத்தப்பட வேண்டியது, அது கருத்தியல் மற்றும் உரிமை மீட்புயுத்தமாகும்.

இவ்வுத்தத்தி்ன் ஆயுதம் நமது அறிவு, போராளிகள் இதை படிக்கின்ற நீங்களும், இதனை எழுதிய நானும் மற்றும் ஒவ்வொரு தமிழனும்தான். இவ்வுத்தத்தில் தாக்கப்பட வேண்டியது சிங்கள அரசின் பொய்யுரைகள், மனித உரிமை மீறல்கள், பேரினவாதம், சம உரிமை மறுப்பு, போரியல் குற்றங்கள் என்பவையே. நாம் வென்று கைப்பற்ற வேண்டிய களம் என்பது வலைப்பதிவில் தொடங்கி, சிங்கள ஆட்சிக்கு எதிரான தெருமுனை கூட்டங்கள், ஊர்வலங்கள், அரசியல் தலைவர்கள் சந்திப்புகள் வழியாக ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று தமிழர்களின் அங்கீகாரத்தை பெறுவதுதான்.

தயவு செய்து தங்களது பங்களிப்பை வலைப்பதிவுடன் நிறுத்தி விட வேண்டாம், நாம் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று தமிழீழ விடுதலையை விரைவுபடுத்துவோம். இப் போராட்டத்திற்கான பொருப்பு உங்களதும் என்னுடையதுமாகும்.


இவ்வேலையில் நான் என்றோ எங்கோ படித்தது  ஒன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது.

அடங்கா யானை போல் அதிரடி கலகம் செய்
அழிவினில்தான் ஆக்கம்முண்டாம் ஆதலால் தியாகம் செய்!

 

2 comments:

Anonymous said...

thirumba 1983 (indian army kalam)andu kalathila irunthu thudankanum? ponkaiya...


mukiyamana adkal ellam odi poiyiduvanka.. puthu vanthathukalai army sudu thalluvan...:-((

Anonymous said...

சோர்ந்து போகாதீர்கள் சொந்தங்களே, தமிழ் தேசத்தை விடுவிப்பதற்கான பொருப்பை ஈழத்தில் வாழும் சொந்தங்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மட்டும்தான் என இருந்துவிட வேண்டாம். தற்பொழுது நடக்கின்ற யுத்தம் இறுதியுத்தம் என யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஈழத்தில் நடக்கின்ற யுத்தம் மட்டுமே தமிழீழத்தை பெற்றுத் தந்துவிடாது. தமிழீழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட தேசத்திற்கான யுத்தம் என்பது உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் நடத்தப்பட வேண்டியது, அது கருத்தியல் மற்றும் உரிமை மீட்புயுத்தமாகும்.//

த‌ங்க‌ளுடைய‌ ப‌திவை ப‌டித்தேன்.. பெரும்பாலும் நான் த‌மிழ் ம‌ண‌த்தில் ப‌திவுக‌ளை ப‌டிப்ப‌துட‌ன் ச‌ரி.... என்னுடைய‌ உண‌ர்வுக‌ளுக்கு ஒத்துப்போவ‌தாக‌ இருந்தால் ம‌ட்டுமே. நான் இங்கு இடும் ம‌றுமொழி என்னுடைய‌ 2வ‌து...
த‌மிழீழ‌ம் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அத‌ற்கு நாம் என்ன‌ செய்ய‌ வேண்டும் என்ப‌தை அடுத்த‌ ப‌திவில் சொல்லுங்க‌ள். த‌மிழ‌ர்க‌ள் ஒன்றிணைக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அந்த‌ ஒனறினண‌ப்பு ம‌ட்டுமே, ந‌ம்முடைய‌ இன‌ம் அழிந்துவிடாம‌ல் காக்கும்... ஒருங்கிணைவோம் த‌மிழ‌ராக‌... வாழ்வது ஒருமுறை என்மொழிக்காக‌ என் தாய் மொழிக்காக‌ வாழ்ந்துவிட்டு போகிறேன்..