Tuesday, December 30, 2008

தமிழருக்கு கா‌ங்‌கிர‌ஸ் இழைக்கும் துரோகம்



பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை ‘அதிகபட்சமானது’, ‘தேவையற்றது’ என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொருத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்துதான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இத்தாக்குதலில் அளவிற்கு அதிகமான இராணுவ பலம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமின்றி, வன்முறையும் பெருகிவருவது ஏமாற்றமளிக்கிறது. இப்படிப்பட்ட தேவைக்கும் அதிகமான படைப்பலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசா பகுதி மீது நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் தாக்குதல், வன்முறையை தொடரவே வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, அமைதி முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்பதால் அதிகபட்ச கட்டுப்பாட்டை (இஸ்ரேல்) கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது” என்று கூற‌ப்பட்டுள்ளது.



பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்திய அரசு கண்டித்திருப்பது நியாயமானது, அதனை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சனையிலும், அது தொடர்பாக நமது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அறிந்த எவருக்கும் அந்த அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் முரண்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை.

காசா பகுதியில் இருந்த இஸ்ரேலின் தென் பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்காக, அங்குள்ள ‘பயங்கரவாதி’களின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் கொலை வெறித் தாக்குதலை நியாயம் என்று (இன்றுள்ள) அமெரிக்க அரசைத் தவிர வேறு எந்த நாட்டு அரசும் ஏற்காது. அத்தாக்குதலில் 300க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இந்தக் கண்டன அறிக்கையை இந்தியாவின் அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ளது.

நமது கேள்வியெல்லாம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தானே இன்றும் இலங்கையில் தமிழர்கள் மீதும் சிறிலங்க விமானப் படை நடத்திவருகிறது? சிறிலங்க விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு அந்நாட்டு இராணுவம் எறிகணைகளை வீசியும், பல்குழல் பிரங்கிகளைச் சுட்டும் தாக்குகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறதே? அதைக் கண்டித்து இந்திய அயலுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை கூட இதுவரை அளிக்காதது ஏன்?



கடந்த 25 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஈழத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்துவருகிறதே. இடையில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலம் தவிர, சிறிலங்க விமானப் படை விமானங்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதானே இருக்கி‌ன்றன? 2005ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ராஜபக்ச பதவியேற்றதற்குப் பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டத் தாக்குதல் இந்த ஆண்டில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில்தான், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு ‘போரை நிறுத்துங்கள்’ என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.



அதன்பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி (இடையில் அக்.06ஆம் தேதி ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது, அதனை மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் விளக்கி முதலமைச்சர் கருணாநிதி பேசினார்) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவராக உள்ள சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டது.

அதனைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்க அரசுடன் பேசுவோம் என்றுதான் கூறினாரே தவிர, சிறிலங்க அரசிடம் பேசி தாக்குதலை நிறுத்துமாறு கூறுவோம் என்ற எந்த உறுதிமொழியையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழர்கள் மீதான தாக்குதலும் நிறுத்தப்படவில்லை.

அதன்பிறகு, டெல்லி வந்த சிறிலங்க அதிபரின் ஆலோசகரான ஃபசில் ராஜபக்சவிடமும் மத்திய அரசு பேசியதற்குப் பின்னரும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மாறாக, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களால் கதிகலங்கி நிறுத்தியிருந்த விமானப்படைத் தாக்குதலை சிறிலங்கா மீண்டும் துவக்கியது. அப்படியென்றால் அர்த்தமென்ன? தாக்குதலை நிறுத்து என்று சிறிலங்காவிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்பதுதானே?

PTI
இதனை எந்த விதத்திலும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுக்கவில்லை. “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும
்” என்று தமிழக முதல்வரிடம் (செய்தியாளர்களிடமும்தான்) மிக டெக்னிகலாக பேசிவிட்டு மத்திய அரசிற்கு ஆதரவு தொடரும் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பறந்தார்.

தமிழக முதல்வரும், பிரணாப் குழப்பியதை பெரிதாக எடுத்துக்கொண்டு, தன் பங்கிற்கு ஒரு விளக்கம் அளித்தார். ஆனால், அங்கு ஈழத்திலோ தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்து தமிழர்கள் மீதான போர் நிறுத்தப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியபோது கூட, நமது தலைவர்கள் பேசியதையெல்லாம் ஒரு சிலையைப் போல அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம் நமது பிரதமர். தமிழக முதல்வர் குறுக்கிட்டு, அயலுறவு அமைச்சரை சிறிலங்காவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதை மட்டும் ஒப்புக்கொண்டு பதில் பேசியுள்ளார். ஆனால் இதுவரை பிரணாப் சிறிலங்கா செல்வது உறுதி செய்யப்படவில்லை.


FILE
அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்க சென்று அதிபர் ராஜபக்சாவை சந்தித்துப் பேசினால் அடுத்த நிமிடம் சிறிலங்க இராணுவம் தாக்குதலை நிறுத்துவிடாது என்பது இங்கேயும் தெரியும், அங்கேயும் தெரியும். ஏனென்றால் தமிழர் பிரச்சனையில் நமது மத்திய அரசிற்கும், சிறிலங்க அரசிற்கும் ஒரு ‘நல்ல புரிந்துணர்வ’ உள்ளது விவரம் தெரிந்த தமிழர்களுக்குப் புரியாததல்ல.




அதனால்தான், இன்று வரை சிறிலங்க அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை, தமிழர்களுக்கு எதிராக அது நடத்திவரும் இராணுவ ரிதியிலான இன ஒடுக்கலை எதிர்க்கவில்லை. எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை.


FILE
காசாவில் உள்ள ‘இலக்குகளை’ குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அங்கேயுள்ள அப்பாவி மக்களை கொல்கிறது என்பதை உணர்ந்து அறிக்கை அளிக்கும் அயலுறவு அமைச்சகத்திற்கு, அதேபோல விடுதலைப் புலிகளின் ‘இலக்குகள’க் குறிவைத்து அந்நாட்டு விமானப்படை நடத்தும் தாக்குதலில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாதா என்ன? தெரியும். பிறகு ஏன் கண்டிக்கவில்லை? காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள ‘பார்வை’. அதுதான் நமது அயலுறவு அமைச்சகத்தை வழிநடத்துகிறது.

எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அதனையெல்லாம் எதிர்த்துக் கண்டிக்கும் ஒரு ஜனநாயக அரசாகத்தான் இந்தியா இருந்துவருகிறது. அப்படிபட்ட கொள்கையை ஒட்டியே நமது அயலுறவு அமைச்சகத்தின் செயற்பாடும் இருந்து வருகிறது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மட்டும், அது காங்கிரஸ் கட்சியின் தற்குறித்தனமான பார்வையால் வழிநடத்தப்படுகிறது.

அதனால்தான், “இந்த ஒரு ஆண்டில் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்தத் தாக்குதல்களில் சில சமயங்களில் 500 கி.கி. எடையுள்ள குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன” என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர்

FILE
உதய நாணயக்காரா பேசியதற்குப் பின்னரும், மத்திய அரசு அதனைக் கண்டிக்கவில்லை. அது தமிழர்களை விட சிங்களவர்களையும், சிங்கள அரசையுமே நட்பாகக் கருதுகிறது. அந்தத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று எத்தனை முறை தமிழ்நாட்டின் தலைவர்கள் வலியுறுத்தினாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு விளையாட்டாகவே தெரிகிறது.


2004ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தனர். தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவை மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது. அந்த 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தால் மத்தியில் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்தும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கியிருந்த இடத்திற்கே வந்த அவரைச் சந்தித்துப்பேசி சிக்கலின்றி ஆட்சியமைக்க வழிகேட்டவர், இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக, தமிழ்நாட்டின் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விடுக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமான துரோகமல்லவா? தமிழக மக்களுக்கு இதெல்லாம் புரியாதா?

அங்கே பாலஸ்தீனர்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. இங்கு ஈழத் தமிழர்கள் மீது குண்டு வீசி கொன்றொழிக்கிறது சிங்கள அரசு. அதற்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரவளிக்கிறது. உதவுகிறது. இதனை தமிழர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள்.


FILE
அரசியல் சித்து வேலைகள் மக்களுக்குப் புரியாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல. தமிழக மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள். 2004ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு ஏற்பட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவளித்தார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்துவரும் காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்.

Friday, December 26, 2008

அக்கா, தங்கையோடு பிறந்த காங்கிரஸ்காரன் இதை பார்கட்டும்

எச்சரிக்கை;- 18 வயதுக்கு இளையவர்களும், இளகிய நெஞ்சம் படைத்தவரும் இதனை பார்க்க வேண்டாம்.



மட்டுறுத்தப்பட்ட வகையில் வசனங்கள் மொழி பெயர்பு பதிவர் 'வெண்காட்டான்'
====================
வெண்காட்டான் said... இயலுமானவை ஓரளவிற்கு மொழி பெயர்ந்துள்ளேன்.
கீழ் ஆடையை மட்டும் கழற்றியுள்ளார்கள். காடையர்கள். எதுவும் எழுத முடியவில்லை. எவ்வளவோ சொல்ல முடியும். ஆனால்....

இராணுவம் 1: அம்மா (தகாத சொல்),(தகாத சொல்) புலி
இராணுவம் 2: இங்கவாடா
இராணுவம் 1: சரி சரி எங்க? முகத்த காட்டு
இராணுவம் 1: எங்க ஜகத், சடலத்தை பிடி, பொறு
இராணுவம் 3: பியல், பியல் தொப்பியை துக்கு (பியல் தொப்பியை தூக்கி சிரிக்கிறான்)
இராணுவம் 4: இவற்றை சரியா பதிவு செய், இந்த இடத்திற்குவா
(துரத்தில் துப்பாக்கி சத்தம்)
இராணுவம் 3 (அ) 4 : வேணாமடா (மிக அருகில் துப்பாக்கி சத்தம்)
(சாவடைநத்த போராளியை சுடுவதாக எண்ணுகிறேன்.)
இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5 (அ) 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக (அழகான).
இராணுவம் 3: அழகாக எடு
இராணுவம் 8: இதை கழற்றுவது எப்படி? (இன்னொரு கமாரவாக இருக்கலாம்)
இராணுவம் 1: இது எப்பவும் வீடியோவில் வரும் பெண்!
இராணுவம் 2: (அ) 4: இது எப்பவும் படத்தில வர்றது!

==================================

இனி பதிவு!

காங்கிரஸ்காரர்களே இதனைப் பாருங்கள், இறந்த பின்பும் இந்த பெண்பிள்ளைகள் (புலிகளாய் இருந்தாலும் இவர் பெண்பிள்ளைகளே! எனது சகோதரிகளே!) படும்பாட்டை. இரக்கம் இருந்தால் ஒருசொட்டு கண்ணீர் விடுங்கள், கோபம் வந்தால் கதறுங்கள், இல்லை காமம்தான் வந்தது என்றால் அது உங்கள்பாடு.

ஆனால் ஒரேஒரு வேண்டுகொள், இந்த ஒளிச்சித்திரத்தை மதிப்புக்குரிய அன்னை சோனியாவிடவும், அவரது மகள் பிரியங்காவிடமும் காண்பியுங்கள், முயன்றால் அந்த சிங்கள வசனத்தை நாகரீகத்துடன் மொழிபெயர்த்து அவர்களிடம் சொல்லுங்கள். பின் அவர்கள் இருவரது சொல்படி நடந்து கொள்ளுங்கள். செய்வீரா..?

இந்த ஆவணத்தை கண்டவுடன் எனக்கு அழகை வந்தது அழவில்லை. கோபம் வந்தது கொதிக்கவில்லை.

ஆனால் எனது மற்றும் எனது குடும்பத்தினரது ஒட்டுமெத்த கோபம் ஓட்டுச்சாவடியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கொட்டுவோம் அது காங்கிரஸ் கட்சிக்கு வழித்தாலும் வழிக்கும்.

நன்றி;- http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008


===============
குறிப்பு 1;- இந்த ஆவணத்தை வைத்து போராளிகள் மீது குற்றம் சுமத்துவது என்பது 'அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம்' என்பது போல் போராளிகளின் மீது குற்றம் சுமத்துபவர்கள் சுமத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

போராளிகளின் நன்னடத்தை பற்றி அறியாதவர்கள் கீழேயுள்ள சுட்டிக்கு சென்று, அவர்களின் நன்னடத்தையை பற்றி பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பின் எழுத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

http://ivanpakkam.blogspot.com/2008_03_01_archive.html

http://ivanpakkam.blogspot.com/2008_06_01_archive.html


குறிப்பு 2;-இந்த ஆவணத்தை பார்த்த பின்பு கோபமோ, ஆத்திரம்மோ கொண்டால் வருந்தி அழவேண்டாம்! உங்கள் கோபத்தை, ஆத்திரத்தை தேக்கி வையுங்கள்.

1.ஈழத்தமிழர் ஆதரவு போராட்டம் நடக்கும் பொழுது உங்கள் கோபத்தை சிங்கள அரசுக்கு எதிரான கோசங்களில் காட்டுங்கள்.

2. புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் உங்கள் உள்ளூர் அரசில் தலைவரை சந்தித்து இந்த கொடுமையை பற்றி சொல்லி தடுக்க வகை செய்யுங்கள்.

3.இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை உறுதி செய்யுங்கள். ஈழத்தமிழர் ஆதரவா கூட்டம் நடக்கும் இடங்களுக்கு சென்று தலையையாவது காட்டிவிட்டு வாருங்கள், அல்லது ஒரு தெருமுனை கூட்டத்தை கூட்டுங்கள்.

வருந்தி அழாதீர்! கோபத்தை தேக்கிவைத்து சனநாயக வழியில் காண்கியுங்கள். தனி ஈழம் அமைய வழி செய்யுங்கள். இதுவே வீரகாவியமான நமது சகோதிரி/மகள்களுக்கு செய்யும் மரியாதை.

Wednesday, December 24, 2008

புலிகளிடம் இருந்து நாங்கள் வாங்கியவை...

தமிழீழத்திற்கு எப்பொழு எல்லாம் ஆதரவு குரல் எழுகின்றதோ, அப்பொழுது எல்லாம் மக்கள் போராட்டம் என்றால் கிழோ என்ன விலை எனக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள் பாடும் பல்லவியில் ஒன்றுதான்..

'நெடுமாறன், வைகோ மற்றும் திருமாவளவன் முதலியோர் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு தமிழீழ ஆதரவு குரல் எழுப்புகின்றனர்' என்பது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, அன்மையின் திருமாவளவன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.


'புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்'.


கேள்வி;- ''புலிகளால் கிடைக்கும் ஆதாயங்களுக்காகத்தான் நீங்கள் ஈழ விவகாரத்தில்இவ்வளவு அக்கறை காட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி...''

பதில்;- ''புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும்,அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம்...அவர்கள் நடத்தும் அரசாங்கம்... புதிய நாட்டை உருவாக்க அவர்கள்மேற்கொள்ளும் முயற்சி... இதற்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும்.புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்.அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையேஎன்பதுதான் எங்களின் மகா வேதனை. புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும்நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில்புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான்ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்.''

நன்றி;- ஜூனியர் விகடன், 28-12-08 -ம் நாள் பதிப்பு.

Sunday, December 21, 2008

இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்

இலங்கையில் சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதலால் பெரும் அவலத்திற்கு உள்ளாகிவரும் ஈழத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டில் இருந்து எழும் ‘போரை நிறுத்து’ என்று ஒலிக்கும் குரல், தனி ஈழ தனி அரசு அமைவதற்கான ஆதரவுக் குரலே என்று மார்க்கசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழரிடையே நீண்ட காலமாக மதித்துப் போற்றப்படும் ஒரு தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரை, ஈழத் தமிழர்களின் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்களையோ, அதற்குக் காரணமான சிறிலங்க பேரினவாத அரசின் இராணுவ நடவடிக்கையையோ அல்லது சிங்கள அரசு தமிழர்கள் மீது திட்டமிட்டு தொடுத்துவரும் இன ஒடுக்கலையோ பேசவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழ மக்களின் விடுதலையை முன்னெடுத்துப் போராடிவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறுமைபடுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி எழுதப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கட்டுரை வேறு எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின் குரலாக இருந்தாலு‌ம் அதற்கு எவ்வித மதிப்பும் அளிக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஆனால் ஒரு மார்க்சியவாதி, அதுவும் இந்திய அளவில் உள்ள ஒரு கட்சியின் தமிழகக் கிளையின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகிறார் என்கின்றபோது, அதில் வாசகர்களுக்கு ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் மார்க்சியவாதிகள் ஒரு பிரச்சனையை அலசும் போது அதில் மனிதாபிமானம் மட்டுமின்றி, யதார்தத்தின் பிரதிபலிப்பும், பிரச்சனையின் மீதான தெளிவான பார்வையும், அதற்கான தீர்வும் இருக்கும்.

ஆனால் இந்தக் கட்டுரையில் அப்படி எதுவும் இடம்பெறாதது மட்டுமின்றி, அதில் யதார்த்தை தங்கள் (அரசியல்) வசதிக்காக மறைக்கும் போக்குதான் துவக்கம் முதல் முடிவு வரை நிறைந்திருந்தது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு அக்டோபர் 14ஆம் தேதி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டு, அந்தத் தீர்மானம் நிறைவேற சம்மதம் அளித்தது மார்க்ஸிஸ்ட் கட்சி. ஆனால் அப்படிப்பட்ட போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் அது விடுதலைப் புலிகளுக்கே சாதமானதாக இருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து அதற்கு வலிமை சேர்க்க முற்பட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் இரண்டு ‘மாபெரும் தலைவர்கள்’ கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது புலிகளுக்குத்தான் வலிமை சேர்க்கும், ஏனென்றால் அவர்கள் போர் நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் பலப்படுத்திக் கொள்வார்கள் என்று உணர்ந்துள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி, அந்தத் தீர்மானத்தை எதிர்த்திருக்கலாமே? எதற்கு மற்ற கட்சிகளோடு இணைந்து ‘ஒருமனதாக’ நிறைவேற ஒத்துழைத்தது? என்ற கேள்வி எழுகிறது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள் என்பதே உண்மையானால், சிறிலங்க அரசும் அதைச் செய்யாதா? அவ்வாறு செய்வதற்கு அதற்கு ஏதேனும் தடை உள்ளதா? தங்களை நன்கு பலப்படுத்திக் கொண்ட பின்னரல்லவா தமிழர்கள் மீது இத்தனை பெரிய தாக்குதலை தொடர்‌ந்தார்போல் நடத்தி வருகிறது சிறிலங்க அரசு?என்றும் ஒரு கேள்வி எழுகிறது.

ஈழ மக்கள் விடுதலை போராட்டத்தில் நியாயம் உள்ளதா இல்லையா?

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த இந்த ஆதரவுக் குரலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு மதிப்பீடு செய்கிறார் என்று கேள்வி கேட்டு, மாவீரர் தினத்தன்று அவரது உரையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர், “இதே நேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்ற அவருடைய வேண்டுகோளை அடியொற்றி, அவர்களின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கு எழும்பும் என்று கூறியுள்ளார்.

தமிழீழ தனியரசிற்கு ஆதரவாக இங்கு குரல் எழுவது, ஆதரவு பெருகுவது எல்லாம் இருக்கட்டும். ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிலையென்ன? அதனை விளக்க வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு பிரிவினையல்ல, அரசியல் தீர்வுதான் சரி என்று அக்கட்சியின் மாநில செயலர் வரதராஜன் கூட சமீபத்தில் அறிக்கை விடுத்திருந்தார். அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீத்தாராம் யச்சூரியும் அரசியல் தீர்வையே வலியுறுத்தி இருந்தார்.

அப்படியானால், அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டம் நியாயமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறதா? ஆம் என்றால் எப்படி? தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக துவக்கத்தில் சாத்வீக வழியில் தானே போராடினார்கள், அது எந்தப் பலனும் அளிக்காத நிலையில்தானே ஆயுதப் போராட்டத்திற்கு வந்தார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறதா? அது தவறு என்று கூறட்டும். சிறிலங்க அதிபர் ராஜபக்சே தமிழர் பிரச்சனைக்கு நீடித்த தீர்வு காணும் நியாய உணர்வு படைத்தவர் என்று சொல்லட்டும். அவர் மேற்கொள்வது ஒரு இனவாத நடவடிக்கை இல்லை என்று கூறட்டுமே.

எல்லா அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்ட ஒரு இனம் தனது விடுதலையை நாடுவதில் என்ன தவறு உள்ளது. அவர்களை அரசியல் தீர்விற்கு கட்டுப்படு என்று சொல்வதற்கு நாம் யார்?

உண்மையை மறைப்பது ஏன்?

“ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்பட்டதற்குப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்த பிரபாகரன் அடுத்த மாதமே தனது நிலையை மாற்றிக்கொண்டு, இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக ஆயுத மோதலை தொடங்கினார்” என்று குறிப்பிடுகிறார். இடையில் நடந்த உறுதி மீறல்களை இந்திய இராணுவத்தின் தளபதியாக அப்பொழுது செயல்பட்ட மேஜர் ஜெனரல் ஹர்கிராத் சிங் ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளாரே. யார் செய்தது தவறு? என்று அலசியிருக்க வேண்டாமா? ஒரு பிரச்சனையை பொதுவில் அலசும் போது உண்மையை வசதியாக மறைத்துவிட்டு வசைபாடுவது நேர்மையாகுமா?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க இலங்கைத் தமிழர்களைக் காக்க சென்ற இந்திய அமைதிப் படை, நமது தளபதிகளின் கட்டுப்பாட்டிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலோ செயல்படாமல், தமிழர்களை இனப் படுகொலை செய்வதில் முழுமூச்சாய் நின்ற சிறிலங்க அதிபர் ஜெயவர்த்தனேயின் அதிகாரத்திற்கு உட்பட்டு அல்லவா செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்த உண்மையை மறைப்பது ஏன்? அதன் காரணமாகத்தானே, புலிகளின் தளபதிகளை சிறிலங்க இராணுவத்திடம் ஒப்படைக்கும் பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்கள் சயனைட் விழுங்கி தற்கொலை செய்துகொள்ள, அதுவே இந்திய அமைதிப் படையுடன் விடுதலைப் புலிகள் மோதுவதற்கு வித்திட்டது? விவரமறிந்த ஒரு மார்க்சியவாதி ஊரறிந்த இந்த உண்மையை மறைக்கலாமா?

ஈழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைபடுத்த சிங்கள இனவாத அரசு தனது பிரச்சார பீரங்கிகளை முடுக்கிவிட்டு என்னென்ன சொன்னதோ, சொல்லி வருகிறதோ அதையெல்லாம் கட்டுரையில் வழங்கி சிறப்பித்திருக்கும் அந்த மார்க்சியவாதி, ராஜபக்ச அரசும் அதன் இராணுவமும், விமானப்படையும் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. சுத்தமான பெளத்த அரசு அங்கு நடைபெறுகிறது என்று நம்பவைக்க சொல்லாமல் விட்டுவிட்டார் போலும்.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களை ஆதரித்து, உலகளாவிய மக்கள் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்சிஸ்ட்டுகள், ஒரு பேரினவாத அரசின் 30 ஆண்டுக் காலத்திற்கும் மேற்பட்ட இன ஒழிப்பை, அடக்குமுறையை உறுதியாக கண்டிக்காமல், அந்த அரசின் அடியொற்றி அச்சு பிசகாமல் கட்டுரைகளைத் தீட்டிக்கொண்டிருப்பது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட சோதனையோ.

“தமிழ்நாட்டில் ஈழ மக்களுக்கு ஆதரவாக இன்று எழுப்பியுள்ள குரல், தனித்தமிழ் ஈழ ஆதரவுக் குரல், தமிழக மக்களின் மனித நேய உணர்வுகளை மடைதிருப்ப முயல்வதை அனுமதிக்க முடியாது” என்று கூறி முடித்துள்ளார்.

எதிர்ப்புக் குரலின் ஒரே ஒற்றுமை!


சொந்த மண்ணிலேயே வேட்டையாடப்பட்டு, வீடு, வாசலை இழந்து, குண்டு வீச்சில் சொந்த பந்தங்களைப் பறிகொடுத்துவிட்டு, கொட்டும் மழையில் காடுகளில் உறைவிடமின்றி, போதுமான உணவின்றி வாடிவரும் ஈழ மக்களுக்காக தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்புகிறார்கள். அவர்களின் துயரம் தீர போர் நிறுத்தம் மட்டுமே வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதன் பிறகு இறுதித் தீர்வு என்பது அம்மக்களின் சுதந்திர முடிவிற்கு விடப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள். அந்தக் குரல் நாளையும் ஒலிக்கும். அது எப்படி ஒலிக்க வேண்டும் என்று அவர்களின் சிந்தனை நிர்ணயிக்கும், அதனை இட்டுக்கட்டிச் செய்யப்படும் பிரச்சாரத்தால் திசை மாற்றிவிட முடியாது.

தமிழக மக்களின் ஆதரவினால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடியைக் குறைக்க, இது புலிகளின் ஆதரவு குரல் என்றும், பிரபாகரனை காப்பாற்றுவதற்கான குரல் என்றும், தமிழர் பயங்கரவாதம் என்றும், இன வெறி என்றும் பல்வேறு குரல்கள் ஊடகங்களிலும், அரசியலிலும் ஒலிக்கின்றன. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டுகள் உட்பட இவர்கள் அனைவரும் ஈழப் பிரச்சனையில் மட்டும் ஒரே குரலாய் ஒலிக்கின்றனர். இதனை தமிழகம் விழிப்புடன் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. அந்தக் குரல்களின் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் இடையில் ஒரே ஒரு ஒற்றுமை நன்கு இழையோடுவதையும் அது கவனிக்கத்தவறவில்லை.

நன்றி!

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0812/20/1081220067_1.htm

Friday, December 12, 2008

வல்லினம், மெல்லினம், இடையினம்

எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது இந்த வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் ?

தமிழ் இலக்கணத்தில் முதல் பாடத்திலே வருவது. உங்களால் சரியாக சொல்ல இயலுகின்றதா என ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

.
.
.
.
.
.
.

இல்லையேனில் இதோ!

வல்லினம்

மெய்யெழுத்துக்கள் பதினெட்டில், முயற்சியுடன் வலித்து ஒலிக்கப்படும் க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு எழுத்தும் வல்லினம் ஆகும். இவற்றை ஒலிக்கும்போது மூச்சுக காற்று மார்பிலிருந்து வலுவாக வருகிறது.

மெல்லினம்

அதிக முயற்சியின்றி மூக்கினால் மெலிந்த ஓசையுடன் ஒலிக்கப்டும் ங், ஞ், ண், ந், ப், ன் என்ற ஆறு எழுத்தும் மெல்லினம்

இடையினம்

மூக்கிற்கும் மார்புக்கும் இடையே மிடற்றினின்றும் ஒலிக்கப்படும் ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு எழுத்தும் இடையினம்