Tuesday, January 22, 2008

தி.மு.க அரசை கலைக்க வேண்டும்! செல்வி ஜெ.ஜெயலலிதா

முன்னால் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 'தி.மு.க' அரசை கலைக்க வேண்டும் எனும் அறிக்கையை நாள்தோரும் விடவில்லை என்றால் தூக்கம் வாரது போலும். அவர் இதுவரைவிட்ட தி.மு.க அரசு கலைப்பு அறிக்கையை ஆவணப்படுத்த முயல்கிறேன் உங்களுக்கு தெறிந்த தேதிகளில் அம்மையார் இவ்வாரு அறிக்கைவிட்டிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதையும் இவ்வரிசையில் சேர்த்து விடுவோம்!

May 16, 2008

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
(thatstamil.com)

Feb 13, 2008

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையவும், தீவிரவாதத்தைத் தடுக்க தவறியதற்காகவும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும். (அ.தி.மு.க செயற்குழு கூட்டம்).

Jan 22, 2008

விடுதலைப் புலிகளால் ஆபத்து தமிழக அரசை கலைக்க வேண்டும் - அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை (puthinam.com)

Jan 21, 2008

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பல்வேறு நபர்கள் தானமாக அளித்த பசு மாடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. தீவனங்கள் சரிவர கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக 15 மாடுகள் இறந்து விட்டது இதற்கு பொருப்பேற்று திரு. மு.கருணாநிதி பதவி விலகவேண்டும். தி.மு.க அரசை கலைக்க வேண்டும். (dinamalar.com)

Monday, January 21, 2008

இதை பார்தபின் கண்ணீர் வரவில்லை என்றால் சொல்லுங்கள்.


http://video.google.com/videoplay?docid=5284960075003286933

வாயும் வயிரும்தான் பர்கரும், பீட்சாவும் சப்பிட பழகிடுச்சு. மனசு என்னோமோ அப்பிடியேதான் இருக்கு.

Thursday, January 17, 2008

July 23, 1983 மீண்டும் வருமா?


நேற்று உடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் சிங்கள அரச அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான மைதிரிபால சிறிசேன பின் வருமாறு ஒரு விடையத்தை தெரிவித்தார்.

//-----
பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன மூலமாக மக்கள் 83 ஆம் ஆண்டு நிலைமைக்கு திரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் 25 வருடகால அனுபவங்கள் இருக்கின்றன என்பதனால் மக்கள் அச்சமடைந்து மனம்தளரமாட்டார்கள்.

முழுவிவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

---//


"பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன மூலமாக மக்கள் 83 ஆம் ஆண்டு நிலைமைக்கு திரும்ப மாட்டார்கள். "

என்று சொல்லுவதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றார் ?

1. சிங்கள மக்களை மற்றும்மொரு இனக்கலவத்துக்கு தயாராக சொல்கின்றரா?

2. அல்லது சிங்கள மக்கள் முற்றிலும் மனமுதிர்சி அடைந்துள்ளனர் அதனால் நாட்டில் நடக்கும் தாக்குதலுக்கு அஞ்சமாட்டார்கள் என்கிறாரா?


பதில் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!