Monday, October 28, 2013

iOS 7 -ம் தமிழ் விசைபலகையும்!

ஆப்பிள் நிறுவனத்தின் iOS ஆனது துவக்கத்தில் இருந்தே தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கு தனது திறன்பேசிகளுக்கான (Smart Phone) இயங்குதளத்தில் (operating system) ஓர் இடத்தை அளித்து வந்துள்ளது. இதனாலே iPhone மற்றும் iPod கருவிகள் தமிழ் எழத்துருக்கள் (Font) இயங்குதளத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது.

Android இயங்குதளத்தில் தமிழ் எழுத்துருக்களுக்கான வசதிகள் துவக்ககாலங்களில் இல்லாமல் இருந்ததே உண்மை. இதனால் தமிழ் எழுத்துருக்களை தனியாகவே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டியிருந்தது.

iOS-ன் தற்பொதைய 7-ம் பதிப்பில் தமிழ் விசைப்பலகை என்பது iOS 7-ன் ஓர் அங்கமாகவே உள்ளது. எனவே மின்னஞ்சல், குறுந்தகவல், என அனைத்திலும் தழிழை பயன்படுத்தலாம். iOS-ல் இரண்டு (தமிழ் 99 மற்றும் அஞ்சல்) விதமான விசைபலகைகள் இடம்பெற்றுள்ளன.


 தமிழ் 99  இப்பெயருக்கான காரணம் 1999-ல் தமிழ் அறிஞர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டதனாலே.

தமிழை தமிழ் வழியாக எழத தமிழ் 99 விசை பலகை உதவுகின்றது. இதில் தமிழ் எழுத்துகள் பின் வருமான வரிசையில் அமைந்துள்ளது
  • உயிர் குறில்கள் – இடது பக்க நடு வரிசை
  • உயிர் நெடில்கள் – இடது பக்க மேல் வரிசை.
  • அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.
  • அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.
  • அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் அருகருகே உள்ளன.

தமிழ் 99 விசைபலகைபற்றியான மேல்லதிக தகவலுக்கு இங்கே சொடுக்குங்கள்.






அஞ்சல் விசைபலகை தமிழை ஆங்கிலத்தின் வழியாக (Ponatical)  எழுத உதவுகின்றது. இவ்வகையான விசைபலகை தமிழ் எழுத்துருகள் அறியாதவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

அஞ்சல் விசைபலகையின் உதவியோடு நான் முதன் முதலில் தட்டச்சு செய்ய பழகினாலும், இப்பொழுது தமிழ் 99 விசைபலகையே  பயன் படுத்துகின்றேன். எனது பரிந்துரையும் அதுவே.

இவ்விரு விசைபலகையுடன் தமிழ் அகராதியும் iOS-ல் உண்டு. இது பயனீட்டாளரின் உள்ளீடுகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை வழங்குகின்றது. தட்டச்சு பிழைகளையும் சரி செய்யவல்லது.  

இவ்விரு விசைபலகையும் செல்லினம் எனும் செயலியின் அடிப்படையிலே அமைக்கப்பட்டுள்ளது. iOS மற்றும் Android இயங்குதளத்திற்காக இதனை வடிவமைத்தவர் மலேசிய தமிழரான முத்து நெடுமாறன்.

ஐபோன்களின் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது குறித்து செல்லியலுக்கு பிரத்தியேகமாக தனது கருத்துரையை வழங்கிய  முத்து நெடுமாறன் பின்வருமாறு கூறினார்:

“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற முறையில் இது நமக்கெல்லாம் உற்சாகமூட்டக்கூடிய ஒரு முன்னேற்றமாகும். தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் விசைத் தட்டுக்களுடன், மிக அழகான வடிவமைப்பில் தமிழ் எழுத்துக்கள் புதிய ஐபோன்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கருவிகளில் தமிழைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் சுலபமாகவும், மகிழ்ச்சியாகவும்  இருக்கின்றது.'

“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் உலகம், இந்த அற்புதமான கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழை செல்பேசிகளிலும் தட்டைக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படுத்துவதோடு, தமிழிலேயே தகவல்களையும், செய்திகளையும், உள்ளடக்கங்களையும் உருவாக்க வேண்டும், பரிமாற்றங்களும் செய்ய வேண்டும்  என கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அப்போதுதான், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடும், தமிழை உள்ளீடு செய்வதும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்”.

ஐபோன்னில் ஒரேநேரத்தில் பலவிதமான விசைபலகைகளை ஒருசேர பாவிப்பது எளிது. இனி தமிழ் விசைபலகையும் திறன்பேசிகளில் பயன்படுத்துவோம்.

 







Saturday, October 26, 2013

மீண்டும் பதிவுலகிற்கு!

கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது காலம், என் கடந்த பதிவிற்கும் இப்பதிவிற்கும்.

2009 ஆண்டில் ஈழத்தில் நடந்த இனஅழிப்பை பொருட்டு அரசியல் பணிக்காவும். இனஅழிப்பின் பொருட்டு ஏற்ப்பட்ட மனஉளைச்சல் மற்றும் பல காரணிகளால் எழுதுவது என்பது முற்றாக அற்றுபொய்விட்டது!. இப்பொழுது மீண்டும் எழதுவதற்கான காலம் கனிந்துவிட்டதாக உணர்ந்து எனது எழத்து பணியை துவங்குகின்றேன்.

இது தொடருமா என்ற வினாவிற்கு காலம்தான் பதில்கூறவேண்டும்!

இனி பதிவிற்கு..