Wednesday, December 24, 2008

புலிகளிடம் இருந்து நாங்கள் வாங்கியவை...

தமிழீழத்திற்கு எப்பொழு எல்லாம் ஆதரவு குரல் எழுகின்றதோ, அப்பொழுது எல்லாம் மக்கள் போராட்டம் என்றால் கிழோ என்ன விலை எனக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள் பாடும் பல்லவியில் ஒன்றுதான்..

'நெடுமாறன், வைகோ மற்றும் திருமாவளவன் முதலியோர் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு தமிழீழ ஆதரவு குரல் எழுப்புகின்றனர்' என்பது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, அன்மையின் திருமாவளவன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.


'புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்'.


கேள்வி;- ''புலிகளால் கிடைக்கும் ஆதாயங்களுக்காகத்தான் நீங்கள் ஈழ விவகாரத்தில்இவ்வளவு அக்கறை காட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி...''

பதில்;- ''புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும்,அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம்...அவர்கள் நடத்தும் அரசாங்கம்... புதிய நாட்டை உருவாக்க அவர்கள்மேற்கொள்ளும் முயற்சி... இதற்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும்.புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்.அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையேஎன்பதுதான் எங்களின் மகா வேதனை. புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும்நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில்புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான்ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்.''

நன்றி;- ஜூனியர் விகடன், 28-12-08 -ம் நாள் பதிப்பு.

2 comments:

Anonymous said...

வான் படை உயர் அதிகாரிகளை சிங்களத்திற்கு அனுப்பியுள்ள
மெளண மோகன்,சோனியா
உருவங்கள் எரியட்டும்.
தமிழகக் காங்கிரசே போய் தூக்கில்
தொங்குங்கள்.இடம் பெய்ர்ந்த மக்களைக் குண்டு போட்டு அழிக்கிறது சிங்களம்.உங்களை ஓட்டால் கொல்லப் போகிறது தமிழகம்.

வெண்காட்டான் said...

இவர்கள் பணம் வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்ப இந்திய நடுவண் அரசு நேரடியாக கைது செய்யலாமே? இந்திய உளவுத்துறை இதை ஏன் பெரிதாக்கவில்லை. ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த முட்டாள்தனத்தை காங்கிரஸ்காரர்கள் நம்பி நடக்கட்டும். நாங்கள் எங்கள் வேலையைப் பார்ப்போம்.