Showing posts with label அனிதா பிரதாப். Show all posts
Showing posts with label அனிதா பிரதாப். Show all posts

Thursday, January 01, 2009

சிங்களத்தானால் இந்தியர்கள் (தமிழர் அல்லாதோர்) தாக்கப்பட்டுள்ளார்களா?

இந்திய இறையான்மையையும், தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டு தமிழின அழிப்புக்கு தோள்கொடுத்து நிற்கும் காங்கிரஸ் கட்சி சகோதரர்களுக்கு ஒரு கேள்வி.

இலங்கை அரசால் அல்லது சிங்கள காடையர்களாள் ஒரு இந்தியன் கூட இதுவரை தாக்கப்பட்டது கிடையாதா ? இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டிருந்தாலும் அவர்களை பற்றியது அல்ல என் கேள்வி. நீங்கள்தான் தமிழரை இந்தியனாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்களே! நான் கேட்பது தமிழர் அல்லாத இந்தியர் யாரும் இதுவரை சிங்களத்தானால் தாக்கப்பட்டதோ அல்லது கொல்லப்பட்டதோ கிடையாதா? என்பதுதான் என் கேள்வி.

என்னைப் பொறுத்தவரை உங்களது பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஏன் என்றால் உங்களுத்தான் உங்களது தலைவனின் மரணத்தை தவிர வேறு எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் சக்தியில்லையே. அதனால் உங்களுக்கு ஞாபகம் ஊட்டுவையில் 1983 கருப்பு ஜீலையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே சொல்கிறேன்.


1983 ஆம் ஆண்டு ஜீலை 26 ஆம் நாள் மாலையில் இந்திய ஹை கமிஸ்ஷனில் (Indian High Commission), பாஸ்போர்ட் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன் சந்திரன் வீட்டில் இல்லாத பொழுது அவரது வீடுதாக்கப்பட்டது. வீட்டின் கண்ணாடி சன்னல்களையும் கதவுகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த சிங்கள இன வெறி கும்பல் அவரது மனைவி, ஐந்து வயது மற்றும் ஐந்து மாத குழந்தைகள் கொலை அச்சுருத்தி வீட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டு அவர்களது முழு உடைமைகளையும் சூரையாடியது. மோகன் சந்திரன் குடும்பம் உயிரை பிடித்துக் கொண்டு இந்தியா ஓடி வந்த கதை ஞாபகம் இருக்கிறதா உமக்கு ஞாபகம் இருக்காது!

மோகன் சந்திரன் மட்டும் இன்றி மேலும் பல இந்தியர்கள் சிங்களத்தானி்ன் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளர்கள். தூதரக பணியாற்றிய மோகன் சந்திரன்னே தப்ப முடியாத பொழுது சதாரண இந்தியனின் நிலை என்னவாகியிருக்கும்.

ஆதாரம்:- Island of Blood by Anita Pratap (pages 54 to 56)

Sunday, June 08, 2008

வன்னிகாட்டுக்குள் புலிகளின் விருந்தோம்பலும் கண்ணியமும் - பகுதி ஆ

சென்ற பதிவின் தொடர்சி
======================

உடல் குளிருக்கு பழகியதும் எனது சுவாசம் சீராணது. என் உடல் முழுதும் சோப்பு போட்டுவிட்டு தண்ணீரை ஊற்றி கொள்ள எத்தனித்த போது வாளி இரண்டும் காலியாக இருப்பதை உணர்தேன். இப்பொழுது இரண்டு வழிகள்தான் உள்ளது, ஒன்று நானாக தண்ணீரை இறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்த இளம் போரளிகளில் ஒருவரை நீரை இறைத்து தர சொல்ல வேண்டும். அப்படி ஒருவர் இறைத்து தரும் பட்சத்தில் நான் எங்கு மறைவது?

பிறகு நானே நீரை இறைத்துக் கொள்ள முடிவு செய்தேன். எனது சிறுவயதில் வாரப்பெட்டி (கேரளாவில்) பாட்டி வீட்டல் கிணற்றில் இருந்து நீர் இறைத்த அனுபவம் உள்ளது. கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது, பணிப்பெண் மேரி கைதேர்ந்த வகையில் நீர் இறைப்பதற்கு கற்று தந்தாள். இப்பொழுது கிட்டதட்ட எனது கொள்ளு பாட்டியை போல் நீரை இறைத்துக் கொண்டுள்ளேன். நான் படித்து, வேலைக்கு சென்று, நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து, தனியாக குடும்பத்தை பேனி, சரளமாக ஆங்கிலம் பேசி, பல நாட்டு அதிபர்களுடண் பழகி, வெளி நாடுகள் சென்று வந்திருந்தாலும் சில விசயங்கள் எப்பொழுதும் மாறுவது இல்லை.

நான்கு முறை shampoo-வினால் கேசத்தை கழுவி, பிசுபிசுப்பு தன்மையற்று வைக்கோலை போல் உலர்வாக உணர்த்தும் நான் குளிப்பதை நிறுத்தினேன். உடலை துவட்டிக் கொண்டு, டால்கம் பவுடரை உடலில் தூவியபின் புதிய உடைக்கு மாறினேன். இப்பொழுது நான் யானை பசியில் இருப்பதை உணர்தேன்.

எனது பொருட்களை எடுத்துக் கொண்டு அவ்விரு போராளிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து விட்டு, அவர்களின் உறைவிடம் நோக்கி நகர்தேன். சுற்றும் முற்றும் பார்த்தவாறு தூய்மையான காற்றை ஆழ்ந்து சுவாசித்தேன். இரவு நேரத்து வானம் லட்சோபலட்ச நட்சத்திரங்களாள் ஓளியுட்டப்பட்டிருந்தது. மங்கிய நிலவு ஒளி ரம்மியமாக காட்சியளித்தது. என்னை சுற்றிலும் செடிகொடிகளும் மரங்களும் கோட்டோவியமாய் தெரிந்தது. ஒரு பதினைந்து அடி தொலைவில் உள்ள மரத்தில் வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று ஊசலாடிக் கொண்டிருந்தது.

என்னோடு சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த புலி போராளிடம் "என்ன அது?" என்று வினாவினேன்.

'இரவுச் சாப்பாடு' என பதில் வந்தது.

அவர்களது பதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது, மீண்டும் தொங்கி கொண்டிருந்த பொருளைப் பார்த்துவிட்டு 'சாப்பாடு என எதை சொல்கின்றீர்கள்' என வினாவினேன்.

'தோலுரிக்கப்பட்ட மயில்தான் அங்கு இருப்பது. அரிசி சோறும், மயில் கறியுமே இன்றைய இரவு சாப்பாடு'.

மீண்டும் ஒரு முறை உற்றுபார்துவிட்டு, மரத்தில் தொங்குவது மயில்தான் என உணர்தேன். மரத்தில் தொங்குவது இறகுகள் நீக்கப்பட்ட மயில்தான். சற்று முன்னே பிடிக்கப்பட்ட மயில் பொங்குகள் நீக்கி சுத்தம் செய்யவதற்கு ஏதுவாக தாழ்வான மரக்கிழையில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. மயிலின் நீண்ட கழுத்தும், புடைத்துக் கொண்டிருக்கும் வயிறும், எழும்பும் தோலூமாக இருக்கும் அதன் கால்கள் ஆகியவற்றை கொண்டு தொங்குவது மயில்தான் என்பதனை உணர்தேன்.

ஒரு மணிநேரத்தில் அந்த மயில் எங்களது தட்டுகளில் இருந்தது, மயில் கறி பழுப்பு நிறத்தில் உண்ன கடிணமாக இருந்தது. ஒரு துண்டை வாயில்லிட்டு நெடு நேரம் மென்று கொண்டிருந்தேன். மெல்லவே கடிணமாக இருக்கும் இவை எளிதில் சீரணிக்க முடியாதவையாகவே இருக்கும். அதனால் அதனை ஒருபுறம் எடுத்து வைத்துவிட்டு சாதத்தை மட்டும் குழம்போடு சேர்த்து சாப்பிட்டேன். பட்டை தீட்டப்படாத அந்த அரிசி ருசியாக இருந்தது. புலிகள் சிறந்த போராளிகளாக இருக்கலாம் ஆனால, சமையலில் கொஞ்சம் மேசம்தான்.

உணவருந்தியபின் அனைவரும் உறங்க சென்றுவிட்டோம். நான் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டேன், கட்டிலில் நான் படுத்திப்பது என் பணியாட்கள் கீழே தூங்குவது போலவும் நான் இராணி போன்றும் ஓர் உணர்வை ஏற்படுத்தியது. நான் ஓர் அறையில் இருபது ஆண்மகன்களுடன் இருப்பது என் பெண்மைக்கான பாதுகாப்பற்ற தண்மையையோ அல்லது பயத்தையோ எற்படுத்தவில்லை. இந்த புலி போராளிகளுக்கு ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் கற்ப்பித்து அதை பேணிவருவதற்காக பிரபாகரண் என்உள்ளத்தில் ஓர் உயர்ந்து நின்றார். புது டெல்லியின் மனித கலவைக்குள்தான் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன் மற்றும் சாலைகளில் பார்வையாலே துகில்லுரியப்பட்டருக்கின்றேன். ஆனால் இங்கு இவர்களிடம் காமம் கலந்த பார்வையோ, எண்ணமே அறவே இல்லை. என்னை ஒரு பெண்னாக கூட பார்காமல் அவர்கள் அறையில் உள்ள ஒரு பெருளைப் பார்பதது போன்ற ஒரு சராசரி பார்வையிலே பார்த்தனர்.

அன்று இரவு மிகவும் நன்றாக தூங்கினேன்.

Wednesday, March 19, 2008

வன்னிகாட்டுக்குள் புலிகளின் விருந்தோம்பலும் கண்ணியமும் - பகுதி அ

அப்பன் மவனே சிங்கன்டா: SRI LANKA -- "Land of Injustice-அனிதா பிரதாப்-வீடியோ.

திருவாளர் சின்னகுட்டியின் வீடியோ பதிவைபார்தபிறகு ISLAND OF BLOOD புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அதில் புத்தக ஆசிரியர் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேட்டி எடுக்கும் பொருட்டு யாழ்பாணம் செல்லமுயல்கிறரர் ஆனால் அப்பொழு அங்கு அமைதிகாக்கும் (எதனை காத்தனர் என்று பிறகு பார்போம்.) பொருட்டு சென்ற இந்திய ராணுவம் இந்திய பத்திரிக்கையாளர்கள் யாழ்பாணம் செல்ல தடைவித்திருந்தது.


அதனால் அனிதா பிரதாப் வவுனியா சென்று அங்கிருந்து காட்டின்னூடாகவும், மக்கள் மற்றும் இந்திய இராணுவம் அதிகம் இல்லாத பகுதியூடாகவும் யாழ்பாணம் செல்ல வவுனியா நகரின் புலிகளின் கட்டளை தளபதி தினேஷ் யோசனை கூறி அதற்கு வழிவகையும் செய்தார்.


அனிதா பிரதாப் மற்றும் இந்தியா டுடேயின் புகைப்படகாரர் "ஷாம் டெக்வானி" இரண்டு புலிகளின் துணையோடு ஒரு மழை நாளில் வவுனியா காட்டினுடே தமது பணத்தை துவக்கினர். இவர் உழவுஇயந்திரம் (நம்ம ஊர் டிரக்டர்) முதல் மிதிவண்டி, கால் நடையாகவும் தமது பயணத்தை மேற்கொண்டனர். மயிர்யிழையில் உயிர் தப்பிய சம்பவம் உட்பட பல இன்னல்களை கடந்து, சேறும் சகதியும் அப்பியபடி தமது முதல் நாள் பயணத்தை நடு காட்டினில் நிறைவு செய்கிறார். இனி அவரது அனுபவத்தை அவரது சொல்லில் கேட்போம்.

பின் வரும் பகுதி அனிதா பிரதாப்பின் ISLAND OF BLOOD புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

========

அன்று விரைவில் இருள் கவிழ்ந்து விட்டது, கிட்டதட்ட ஏழு மணிவாக்கில் அடர்ந்த காட்டினூள் இருந்த விடுதலை புலிகளின் உறைவிடைத்தை அடைந்தோம். அங்கு கிட்டதட்ட ஐந்து அல்லது ஆறு புலிகள் இருந்திருப்பர். அந்த சிறு வீடு ஓரு முற்றமும், காய் கறிசெடிகளும், பழவகை மரங்களும் அடங்கிய சிறு தோட்டம் இருந்தது. பெறிதும் சிறிதும்மாக இரண்டு அறைகள் அந்த வீட்டில் இருந்தது. அந்த சிறிய அறையில் அரிசி குவியல், சிறிது வெங்காயம் மற்றும் சில உணவு பொருட்களும் இருந்தன. பெரிய அறையில் கரும் பலகையில் ஆன கட்டிலில் படுக்கையும், மடித்து வைக்கப்பட்ட சில பாய்களும், துணிகளை தொங்கவிடுவதற்காக அறையின் குறுக்காக கட்டப்பட்டு இருந்த கயிற்றில் இரு கட்டம் போட்ட சில லுங்கிகளும் தொங்கவிட பட்டிருந்தன. லாரி பேட்டரி மூலம் ஒற்றை டியூப் விளக்கு மங்கிய நிலையில் அந்த அறையை ஒளியூட்டிக் கொண்டிருந்தது.

'நீங்கள் படுக்கையை எடுத்து கொள்ளலாம், நாங்கள் தரையில் படுத்து கொள்கின்றோம்' என அந்த அணியின் தலைவர் கூறினார்! இது பெண்னாய் இருப்தனால் கிடைக்கும் சொவுகர்யம். 'நாங்கள் சமைக்க துவங்குகிறோம், சமையல் முடிய ஒரு மணிநேரம் ஆகும், உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?' என தமிழில் கேட்டார்!

'நான் குளிக்க வேண்டும், முதல் வேளையாக என் மேல் உள்ள இந்த சகதியை கழுவ்வேண்டும்' என்றேன்.

'நீங்கள் கிணற்றுக்கு போய் குளிக்கலாம்' என்றார் அவர்!

நடுகாட்டினில் குளியல் அறையை எதிர் பார்பது அர்தம்மற்றது. இருப்பினும் இரவில் திறந்த வெளியில் குளிப்பதற்கு எனக்கு தயக்கம் எதும் இல்லை. பாம்புகள் இருக்கலாம், இருப்பினும் வேறுவழி இல்லை. எனது துண்டு, சோப்பு சாம்பூ மற்றும் மாற்று துணியை எடுத்து கொண்டு கிணத்தடிக்கு சென்றேன். ஒரு புலி போராளி இரண்டு வாளி தண்ணீரை இறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். மறைவுக்கு ஒரு தட்டி கூட இல்லாத நிலையில் எனக்கு குளிக்க தயக்கம் ஏற்பட்டது. விடுதலை புலிகள் காமத்தை தியாகம் செய்தவர்கள் என்பது எனக்கு தெரியும், இருப்பினும் எப்படி இருபது வாலிபர்களுக்கு முன் பிறந்த மேனியோடு குளிப்பது ? சேறும் சகதியும் அப்பிய நிலையில் ஆடைகளோடு குளித்தாலும் நான் சுத்தம்மாவது எப்படி?


நான் கோபம், தயக்கம் மற்றும் உதவிகளற்ற நிலையை அடைந்தேன். நான் குளிப்பதை பற்றி சிந்திப்பதைவிட புலி போராளிகளுக்கு கவலை படுவதற்கு பல்வேறு விசங்கள் உண்டு. வேறு வழியின்றி புலிகளின் அணித்தலைவனிடம் என்குழப்பத்தை தெரியபடுத்தினேன். பொருமையோடு கேட்ட அவர் ஒருகணம் யோசித்துவிட்டு இரு இளம் புலிகளை அழைத்து ஒரு எளிய யேசனையை தெரிவித்தார். ஒரு ஜமுக்காளம் துணியை திரைபோல் உயரபிடித்து கொண்டனர் அவ்விருவறும். இது புலிகளின் உறைவிடத்தில் இருப்பவர் பார்வையில் இருந்து என்னை பாதுகாத்தது.



நான் ஆடைகளை களைகையில் அந்த இரு இளம் புலிகளும் நான் இருக்கும் திசையை நோக்கி திரும்பாமல் இருக்கிறார்களா பார்த்தேன். எனக்கு நேர் எதிர் திசையில் பார்த்தவாரு ஒருவருக் கொருவர் ஐந்து அடி இடைவெளியில் நின்று ஜமுக்காளத் துணியை பிடித்து கொண்டு நான் இல்லாதை போல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து நான் தேவையில்லாமல் கவலையுருகிறேன் என்பதை உணர்தேன். பிறகே, ஆடைகள் முழுவதும் களைந்து தண்ணீரை என் மேல் ஊற்றினேன். நீரின் குளிர்தாங்காது நான் இட்ட கூச்சலில் இரு புலிகளும் அவர்களுக்குள் நகைத்துக்கொண்டணர், அதற்கு பிறகு கூச்சல் இடாமுடியாதபடி வாயை முடிக்கொண்டு சில குடுவை தண்ணீரை மேல் ஊற்றிய பிறகு என் உடல் தண்ணீரின் குளிருக்கு பழகிக்கொண்டது.

====

தெடரும்.....